
கிரேட்டர் நொய்டாவில் வரதட்சிணைக்காக இளம்பெண்ணை எரித்தே கொன்றதாக பதியப்பட்டுள்ள வழக்கில் அந்தப் பெண்ணின் மாமியாரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரேட்டர் நொய்டா காவல் துறை டிசிபி தெரிவித்தார்.
வட இந்தியாவில் தில்லியை அடுத்துள்ள உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில் குடும்பம் நடத்தி வந்த விபின் - நிக்கி தம்பதியின் மண வாழ்க்கையில் வரதட்சிணைக்காக பெருந்துயரம் அரங்கேறியுள்ளது.
ரூ. 36 லட்சம் பணத்துக்காக மனைவியை விபின் எரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. தனது அம்மாவை தன் கண் முன்னே விபின் எரித்துக் கொன்றதை பார்த்துக் கொண்டேயிருந்தேன் என்று இத்தம்பதியின் மழலை முகம் மாறா மகன் வாக்குமூலம் போன்று காவல் அதிகாரிகளிடம் தெரிவித்திருப்பது தலையில் இடியை இறக்குவதாய் அமைந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணையில் தப்பியோட முயற்சித்த விபின் பாத்தியா போலீஸாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணின் கணவனை 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், அந்தப் பெண்ணின் மாமியாரும் கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.