மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

மிசோரம் மாநிலம் சாய்ராங் ரயில் நிலையத்தை செப்டம்பர் 13 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்கவுள்ளார்.
சாய்ராங் பகுதியில் பாலத்தின் வழியே அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதை
சாய்ராங் பகுதியில் பாலத்தின் வழியே அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதை படம் - எக்ஸ்
Published on
Updated on
1 min read

சுதந்திரத்திற்கு பிறகு, மிசோரம் மாநிலத்திற்கான முதல் ரயில் நிலையத்தை செப்டம்பர் 13 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார்.

சாய்ராங் பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையமானது, 48 சுரங்கங்கள் வழியாகவும் 53 பாலங்கள் வழியாகவும் செல்லும் வழித்தடங்களைக் கொண்டுள்ளது.

மிசோரம் மாநிலம் ஐஸ்வால் பகுதியில் நடைபெற்ற மாநில காவல் துறை சேவை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் லால்துஹோமா கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்,

''பைராபி - சாய்ராங் பகுதிகளுக்கு இடையிலான அகல ரயில் பாதையானது, 51.38 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ரயில் நிலையம் சாய்ராங் பகுதியில் அதிநவீன வசதிகளுடன் அமையவுள்ளது. இதற்கான பணிகள் 2008 -2009 ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது முடியும் தருவாயில் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் சோதனை ஓட்டத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் பணிகள் சேவை தொடங்கும். செப்டம்பர் 12ஆம் தேதி மிசோரத்திற்கு வரும் பிரதமர் மோடி, செப். 13ஆம் தேதி ரயில் நிலையத்தை தொடக்கிவைக்கிறார்.

நாட்டின் வேறு எந்த ரயில் பாதையும் கொண்டிருக்காத வகையில் 48 சுரங்கள் வழியாகவும், 53 முக்கிய பாலங்கள் வழியாகவும் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் உயர்ந்த ரயில் பாதையாகவும் 104 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே பொறியியல் வரலாற்றில் சவால் நிறைந்த பணியாகவும் மிசோரம் ரயில் பாதை மாறியுள்ளது.

மிசோரத்தில் அமையவுள்ள ரயில் நிலையத்தின் மூலம் போக்குவரத்துக்கான செலவு குறையும். பயணிகள் எண்ணிக்கையும், மிசோரத்தின் பொருளாதாரமும் உயரும். வேளாண்மை மற்றும் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடையும். ராஜ்தானி விரைவு ரயில் போன்ற தொலைதூர சேவைகளை உள்ளடக்கியதாக சாய்ராங் ரயில் நிலையம் இருக்கும்.

மேலும், சாய்ராங் ரயில் நிலையத்தை சர்வதேச அளவில் மேம்படுத்துவதற்கு தேவையான நவீன வசதிகளையும் உள்கட்டமைப்புகளையும் உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது'' என முதல்வர் பேசினார்.

இதையும் படிக்க | ஸ்பைடர்மேன் உடையணிந்து பைக் சாகசம்! ரூ.15,000 அபராதம் விதித்த காவல் துறை!

Summary

PM Narendra Modi to inaugurate Mizoram’s first railway station on Sept 13

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com