
தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்ததால் வெளியேற முடியாமல் தவித்த தொழிலாளர்களை ஆலை சுவரை உடைத்து தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பால் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திங்கள்கிழமை(ஆக. 25) மாலை 5.15 மணியளவில் அமோனியா வாயு கசிந்ததால் பதற்றமான சூழல் அங்கு நிலவுகிறது.
ஆலை உள்ளே தொழிலாளர்கள் பலர் சிக்கியுள்ள நிலையில் அவர்களை வெளியே மீட்டு அழைத்து வரும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், ஆலை சுவரை தகர்த்து உள்ளே சென்று 30 தொழிலாளர்களை மீட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வாயுக்கசிவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.