
முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதல் தொடர்பாக தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை மற்றொரு நபரை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குற்றம்சாட்டப்பட்டவர் தஹ்சீன் சையத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குஜராத்தின் ராஜ்கோட்டில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு விசாரணைக்காக தலைநகருக்கு அழைத்து வரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் முக்கிய குற்றவாளியான சாக்ரியா ராஜேஷ்பாய் கிம்ஜிபாயின் நண்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை காலை நகரின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் ’ஜான் சுன்வாய்’ நிகழ்ச்சியின் போது ராஜ்கோட்டில் வசிக்கும் ராஜேஷ்பாய் கிம்ஜி என்பவரால் தில்லி முதுல்வர் ரேகா குப்தா தாக்கப்பட்டாா்.
இந்த தாக்குதலை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கண்டித்தன.
அதே நேரத்தில் தேசிய தலைநகரில் பெண்கள் பாதுகாப்பு பிரச்னை குறித்து காவல்துறையினரிடம் அவா்கள் கேள்வி எழுப்பினா். ஏற்கெனவே தில்லி முதல்வர் மீதான தாக்குதல் தொடர்பாக ஆட்டோரிக்ஷா ஓட்டுநரான கிம்ஜி (41) கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.