
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஃபிஜி நாட்டின் பிரதமர் சித்திவேணி லிகாமமதா ரபூகா இன்று(ஆக. 25) சந்தித்து பேசினார். தில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் (ராஷ்திரபதி பவன்) இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை(ஆக. 24) இந்தியா வந்தடைந்த ஃபிஜி பிரதமர், நாளை(ஆக. 26) ஃபிஜி புறப்படுகிறார்.
முன்னதாக, தில்லியில் பிரதமர் மோடியுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து ஃபிஜி பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களுடன் பேசும்போது, இந்தியாவும் ஃபிஜியும் உயர்நிலைக் கொள்கையுடன் ஒரே நேர்கோட்டில் சென்று கொண்டிருப்பதாக இரு பிரதமர்களும் குறிப்பிட்டனர். அதனைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவருடனான சந்திப்பு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.