
பாலியல் புகார்களைத் தொடர்ந்து கேரள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராகுல் மம்கூத்ததில் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெரிய அரசியல் கட்சியைச் சேர்ந்த இளைஞர் அமைப்பின் மாநிலத் தலைவர் ஒருவர் தனக்கு தொடர்ந்து ஆபாச அனுப்புவதாகவும் ஹோட்டலுக்கு அழைத்ததாகவும் மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கடந்த வாரம் குற்றச்சாட்டை எழுப்பினார்.
ரினி ஆன் தனது குற்றச்சாட்டில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், பாலக்காடு எம்எல்ஏவும் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவருமான ராகுல் மம்கூத்ததில் அலுவலகத்துக்கு வெளியே பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர் ஹனி பாஸ்கரனும் ராகுலுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், திருநங்கை அவந்திகா, காங்கிரஸ் பெண் தொண்டர்கள் உள்பட பல பெண்கள் ராகுலுக்கு எதிராக குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், ராகுல் மம்கூத்ததிலை சட்டப்பேரவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், அவர் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.
தற்போது அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்து காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், ராகுல் மீது அதிகாரப்பூர்வமாக புகார்கள் எதுவும் காவல்துறையில் பதிவு செய்யப்படாததால், அவர் சுயேட்சை எம்எல்ஏவாக பதவி வகிக்கலாம் என்று காங்கிரஸ் மாநில தலைவர் சன்னி ஜோசப் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.