முதல் விண்வெளி வீரர் அனுமன்! மாணவர்களுடன் உரையாற்றிய அனுராக் தாக்குர்!

தேசிய விண்வெளி நாள் விழாவில் அனுராக் தாக்குர் பேசியது...
பாஜக எம்பி அனுராக் தாக்குர்
பாஜக எம்பி அனுராக் தாக்குர்
Published on
Updated on
1 min read

விண்வெளிக்கு சென்ற முதல் விண்வெளி வீரர் அனுமன் என்று பள்ளி மாணவர்களுடன் உரையாற்றிய பாஜக எம்பி அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சல பிரதேசம் ஹமீர்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குர், தேசிய விண்வெளி நாளையொட்டி, உனாவில் உள்ள பிஎம் ஸ்ரீ பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய காணொலியை அனுராக் தாக்குர் அவரது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

அதில், முதல் விண்வெளி வீரர் யார்? என்று மாணவர்களிடம் கேள்வி கேட்ட அனுராக், மாணவர்களின் பல்வேறு பதில்களைத் தொடர்ந்து, அனுமன்தான் முதல் விண்வெளி வீரராக இருக்க முடியும் என நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “நாம் இன்னும் நிகழ்காலத்தில் நடப்பதையே காண்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் நமது பாரம்பரியம், அறிவு, கலாச்சாரம் ஆகியவற்றை நாம் அறியாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்கு காட்டியதைதான் நாம் பேசுவோம்.

பாடப்புத்தகங்களை தாண்டி, நமது தேசத்தின் மரபுகள், அறிவுகளைப் பார்க்குமாறு பள்ளியின் முதல்வர் மற்றும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அந்த கோணத்தில் பார்த்தால், நீங்கள் நிறைய விஷயங்களைக் காண்பீர்கள்” எனத் தெரிவித்தார்.

கனிமொழி கண்டனம்

அனுராக் தாக்குரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிவிட்டிருப்பதாவது:

”நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஒருவர், பள்ளி மாணவர்களிடம் நிலவில் முதன்முதலில் கால் வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல, அனுமன் என்று கூறுவது மிகவும் கவலையளிக்கிறது.

அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல. வகுப்பறைகளில் இளம் மனங்களை தவறாக வழிநடத்துவது நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அறிவு, பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையை அவமதிப்பதாகும்.

இந்தியாவின் எதிர்காலம், உண்மையையும் கட்டுக்கதையையும் சேர்த்து குழப்பிக் கொள்ளாமல், ஆர்வத்தை வளர்ப்பதில்தான் உள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

The first astronaut Hanuman - Anurag Thakur addresses school students!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com