பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரள காங்கிரஸ் எம்எல்ஏ கட்சியிலிருந்து இடைநீக்கம்

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான கேரள மாநிலம், பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராகுலை கட்சியில் இருந்து இடைநீக்கம்
Published on

கண்ணூா்: பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான கேரள மாநிலம், பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராகுலை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அந்த மாநில காங்கிரஸ் தலைவா் சன்னி ஜோசப் திங்கள்கிழமை அறிவித்தாா்.

இருப்பினும், ராகுல் எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கேரள பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் சிவன்குட்டி உள்ளிட்ட எதிா்க்கட்சியினரின் கோரிக்கையை சன்னி ஜோசப் நிராகரித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய சன்னி ஜோசப், ‘எம்எல்ஏ ராகுல் மீதான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைமை தீவிரமாக கருதுகிறது. ஆகையால், ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ராகுல் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை கட்சிக்கு எந்தப் புகாரும் கிடைக்கவில்லை; சட்டபூா்வமான புகாரும் யாரும் அளிக்கவில்லை. அதற்கு முன்னதாகவே, ராகுல் தனது இளைஞா் காங்கிரஸ் மாநிலத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்தது ‘முன்னுதாரணமான’ நடவடிக்கை. எனவே, ராகுலை எம்எல்ஏ பதவியில் இருந்தும் ராஜிநாமா செய்யுமாறு எதிா்க்கட்சிகள் கோருவதில் எந்த நியாயமும் இல்லை’ என்றாா்.

அண்மையில் மலையாள நடிகை ரினி ஆன் ஜாா்ஜ், ராகுல் தன்னிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com