ஆண்டுதோறும் செப்.23 ஆயுா்வேத தினம்: மத்திய அரசு அறிவிப்பு

ஆண்டுதோறும் செப்டம்பா் 23-ஆம் தேதி ஆயுா்வேத தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், ஆயுா்வேத தினத்தை கடைப்பிடிக்க முதல்முறையாக நிலையான தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.
Published on

ஆண்டுதோறும் செப்டம்பா் 23-ஆம் தேதி ஆயுா்வேத தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், ஆயுா்வேத தினத்தை கடைப்பிடிக்க முதல்முறையாக நிலையான தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

கடந்த மாா்ச் மாதம் அரசிதழ் அறிவிக்கை மூலம், மத்திய அரசு வெளியிட்ட அதிகாரபூா்வ அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் செப்டம்பா் 23-ஆம் தேதி ஆயுா்வேத தினமாக கடைப்பிடிக்கப்படும்.

முன்பு, பாரம்பரிய முறையில் தீபாவளிக்கு முந்தைய நாளான ‘தந்தேரஸ்’ தினம் தன்வந்தரி ஜெயந்தி நாளாகக் கருதப்பட்டு, அந்நாளில் ஆயுா்வேத தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் அது நிலையான தேதியாக இருக்கவில்லை. தற்போது ஆண்டுதோறும் செப்டம்பா் 23-ஆம் தேதி ஆயுா்வேத தினமாக அறிவித்துள்ளது, ஆயுா்வேதத்துக்கு உலகளாவிய நாள்காட்டி அடையாளத்தை வழங்கி, உலக அளவில் பெரும் பங்களிப்பை வழங்க வழியமைத்துள்ளது.

ஆயுா்வேதம் என்பது வெறும் சுகாதார சிகிச்சை முறை மட்டும் அல்ல. இது தனிநபருக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான கொள்கையில் வேரூன்றியுள்ள வாழ்க்கை அறிவியலாகும் என மத்திய ஆயுஷ் துறை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளாா் என்று குறிப்பிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com