
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்.டி.ஏ.) ஆகஸ்ட்டில் தொடங்கிவிட்டது. பிகாரில் அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளிலும், கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகள்; தோல்வியடைந்த தொகுதிகள் என இரு பிரிவுகளாகப் பிரித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. அவற்றில் பாஜக மற்றும் என்.டி.ஏ. தலைவர்கள் பங்கேற்று தேர்தல் வெற்றிக்கான திட்டமிடல் மற்றும் ஆலோசனையில் ஈடுபடுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பூதகரமாக வெடித்துள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில், எதிர்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் தலைமையில் வாக்குரிமைப் பேரணியை பிகாரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அம்மாநில முன்னாள் துணை முதல்வரும் ராஷ்திரிய ஜனதா தளம் கட்சி முக்கிய தலைவருமான தேச்ஜஸ்வி யாதவும் முன்னின்று நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முனைப்புடன் களப் பணிகளை தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.