
கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இந்த பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கேரளத்தில் மூளையைப் பாதிக்கும் அமீபா தொற்றால் இந்த ஓராண்டில் இதுவரை 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமரசேரி பகுதியைச் சேர்ந்த 4 ஆம் வகுப்பு மாணவி அனன்யா(9) இந்த அரிய வகை தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த சில நாள்களுக்கு முன் உயிரிழந்தார்.
சுத்தம் இல்லாத ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மட்டுமே உடலுக்குள் நுழைகிறது. நீச்சல் குளங்களிலும் இருக்கலாம். சுத்தமில்லாத தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவும்போதுகூட மூக்கின் வழியாக நுழையலாம். சிகிச்சை மேற்கொள்ளாவிடில் உயிரிழப்புக்கு அதிக வாய்ப்புள்ளது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது.
இதையடுத்து, உள்ளாட்சி நிர்வாகம் தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்குமாறு முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.