
கேரள அரசியல் வரலாற்றில் பிற கட்சிகளுக்கு காங்கிரஸ் முன்னுதாரணமாக விளங்குவதாக கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி. டி. சதீஷன் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) தெரிவித்தார்.
அண்மையில் மலையாள நடிகை ரினி ஆன் ஜாா்ஜ், ராகுல் தன்னிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டினாா். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரள காங்கிரஸ் பாலக்காடு தொகுதி எம்எல்ஏ ராகுல் மம்கூட்டத்தில் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கோழிக்கோட்டில் செய்தியாளர்களுடன் அவர் பேசும்போது: “முதல்வர் அலுவலகத்திலேயே பாலியல் குற்றச்சாட்டுள்ள நபர்கள் இருப்பதாகவும், அதைக் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனைக் கேள்வி கேட்குமாறு” ஊடகத்துறையினருக்கு சவால் விட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில், “ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் பல தலைவர்கள் மீது விமர்சனம் சுமத்தி பல புகார்கள் இருக்கும்போதும், அவர்கள் பதவி சுகம் அனுபவித்து வருவதாக” குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசியதாவது: “காங்கிரஸ் தார்மீக ரீதியாக துணிச்சலைக் காட்டியுள்ளது. இப்போது அதே பாணியில், பினராயி விஜயன் செயல்பட வேண்டிய தருணம்.
இவ்விவகாரத்தில், சிபிஐ(எம்) ரொம்பவும் அரசியல் விளையாட்டைக் காண்பிக்கக் கூடாது. இன்னும் நிறைய வெளிவரவிருக்கின்றன(ஆளுங்கட்சிக்கு எதிரான தகவல்கள்). அது மட்டும் நடந்தால், கேரளமே அதிரும். இதற்காக தேர்தல் வரை காத்திருக்க வேண்டாம். இதனை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.