Maruti Suzuki's 1st electric vehicle
மின்சார வாகனத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி

மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனம்.. பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனமான இ-விட்டாராவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
Published on

குஜராத்தில் உள்ள ஹன்சல்பூர் உற்பத்தி ஆலையில் மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனமான இ-விட்டாராவை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நேற்று மாலை அகமதாபாத் சென்ற நடோராவில் 3 கி.மீ. தூரத்துக்குப் பிரம்மாண்ட சாலை பேரணியில் பங்கேற்றார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்டப் பணிகளைப் பிரதமர் தொடங்கிவைத்தார்.

இந்த நிலையில், அகமதாபாத்தில் உள்ள மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார வாகனமாக இ-விட்டாரா மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையைப் பிரதமர் தொடங்கிவைத்தார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டும் மாருதி இ-விட்டாரா ஜப்பான் உள்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கலப்பின மற்றும் மின்சார வாகன பேட்டரி உற்பத்தியை ஆதரிக்கும் சுசுகி, தோஷிபா மற்றும் டென்சோவின் லித்தியம்-அயன் பேட்டரி உற்பத்தி வசதியையும் மோடி திறந்து வைத்தார்.

Summary

Prime Minister Narendra Modi on Tuesday flagged off Maruti Suzuki's first electric vehicle e-Vitara from the Hansalpur manufacturing facility in Gujarat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com