
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில, 26 வயதே ஆன நிக்கி பாட்டி, வரதட்சிணைக்காக எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தல் திடீர் திருப்பமாக கணவர் விபின் பாட்டி மீது ஏற்கெனவே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
நிக்கி, தன்னை காதலித்து, திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாகவும், அடித்துத் துன்புறுத்துவதாகவும் காவல்நிலையத்தில் ஒரு பெண் புகார் அளித்ததன் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கிரேட்டர் நொய்டா காவல்நிலையத்தில், ஒரு பெண் விபின் மீது புகார் அளித்திருக்கிறார். அதில், தன்னை விபின் காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், நிக்கியை திருமணம் செய்து கொண்ட பிறகும், தன்னுடன் பழகி வந்த நிலையில், ஒருநாள் நிக்கி தனது சகோதரியுடன் வந்து, தன்னையும் விபினையும் பிடித்து சண்டையிட்டபோது, நிக்கியிடமிருந்து தப்பிக்க தன்னை அடித்துத் துன்புறுத்தியதகாவும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
வரதட்சிணைப் புகாரில், மனைவி நிக்கியை எரித்துக் கொலை செய்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர், விபின் மீது வேறு வழக்குகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்தபோது, ஏற்கனவே ஒரு பெண்ணுடன் பழகி வந்து வழக்குப் பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிக்கியின் தந்தையிடமிருந்து ரூ.36 லட்சம் வரதட்சிணை வாங்கி வருமாறு விபின் வலியுறுத்தி வந்திருக்கிறார். நிக்கி அதற்கு மறுத்ததால், எரியும் திரவத்தை அவர் மீது ஊற்றி தீவைத்துக் கொளுத்தியிருக்கிறார். இதனை அதே வீட்டில் வாழ்ந்து வரும் நிக்கியின் சகோதரி காஞ்சன் தன்னுடைய செல்ஃபோனில் எடுத்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வழக்கில், விபின், அவரது தாய் தயா, தந்தை சத்வீர், சகோதரர் ரோஹித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.