
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பொருள்களுக்கு விதித்திருக்கும் 50 சதவீத வரி ஆக.27 முதல் நடைமுறைக்கு வருவதன் காரணமாக பல பொருள்கள் விலை உயர்ந்தாலும், ஆப்பிள் ஐஃபோன்களின் விலை மட்டும் மாற்றமின்றி நீடிக்கிறது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படும் ஆப்பிள் ஐஃபோன்களின் விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படும், செய்யப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன?
செமிகண்டக்டரில் இயங்கும் பொருள்களுக்கு மட்டும், டிரம்ப் வரி விலக்கு இன்னமும் நடைமுறையில் இருக்கிறது. எனவே, ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் செமிகண்டக்டரில் இயங்கும் சாதனங்கள், ஐஃபோன் உள்ளிட்டவற்றுக்கு டிரம்ப் வரி பொருந்தாது. அவற்றுக்குத் தனி வரி விதிப்பு நடைமுறையில் உள்ளதால், அதன் விலை மட்டும் மாற்றமின்றி நீடிக்கும் என்று தெரிகிறது.
அதாவது, கணினி, ஸ்மார்ட்போன்கள், இதர மின்னணு சாதனங்களுக்கு, டிரம்ப் வரி விதிப்பு முறையிலிருந்து விலக்கு அளித்து கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். இதனால், ஆப்பிள் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
இந்தியா தற்போது உற்பத்தி செய்யும் அனைத்து வகையான ஐஃபோன்களிலும் 71 சதவீதத்தை அமெரிக்க சந்தையில் விற்று வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இது வெறும் 31 சதவீதமாக இருந்தது. ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட வருவாய் அறிக்கையில், அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட ஐஃபோன்களில் பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.