வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த பிரியங்கா, ரேவந்த் ரெட்டி!

வாக்குரிமைப் பேரணியில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா இணைந்துள்ளார்.
பேரணியில் ராகுலுடன் இணைந்த பிரியங்கா
பேரணியில் ராகுலுடன் இணைந்த பிரியங்கா
Published on
Updated on
1 min read

பிகாரில் பத்தாவது நாளாக நடைபெறும் வாக்குரிமைப் பேரணியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இணைந்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. இந்தப் பேரணி இன்று (ஆக. 26) 10வது நாளை எட்டியுள்ளது.

பத்தாவது நாளாக இன்று நடைபெறும் வாக்குரிமைப் பேரணியில் ராகுல் காந்தியுடன், பிரியங்கா காந்தி, முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ மற்றும் பிற இந்தியா கூட்டணித் தலைவர்களும் ஒன்றிணைந்துள்ளனர்.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி சசாரமில் இருந்து தொடங்கப்பட்ட 16 நாள் பேரணி மாநிலம் முழுவதும் 1,300 கி.மீ.க்கும் மேலாக பயணித்து செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் நிறைவடைகிறது.

இதுவரை, கயாஜி, நவாடா, ஷேக்புரா, லக்கிசராய், முங்கர், கதிஹார் மற்றும் பூர்னியா வழியாகச் சென்றுள்ள பேரணியானது, அடுத்து மதுபனி, தர்பங்கா, சீதாமர்ஹி, மேற்கு சம்பாரண், சரண், போஜ்பூர் மற்றும் பாட்னா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கும்.

Summary

Senior Congress leader Priyanka Gandhi Vadra on Tuesday joined her brother and Leader of Opposition in Lok Sabha Rahul Gandhi in the ongoing ‘Voter Adhikar Yatra’ in Bihar’s Supaul.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com