
தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சாலைகளில் மழை நீர் தேங்குவதால், வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச்செல்லப்படும் என்ற அபாயம் உள்ளதால் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் நெடுஞ்சாலையில் ஹைதராபாத் - நிஜாமாபாத் இடையேயான சாலை வெள்ளத்தில் மூழ்கியதாலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் தோஹா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மூன்றாவது நாளாக ஜம்முவின் பெரும்பாலான பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால், அதன் வழியே செல்லும் சாலைகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது. ராம்பன் மாவட்டத்திலுள்ள சந்தர்கோட், கேலாமோர், செஸ்மா ஆகிய பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 250 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ஜம்முவின் உத்தம்பூர் பகுதியிலும் வாகனப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. உத்தம்பூர் பகுதி வழியே செல்லும் நதியில் 20 அடிக்கு மேலே நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்குள்ள செனாப் கால்வாயும் அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளது.
இதையும் படிக்க | பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.