விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

ராகுல் காந்தி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்திருப்பது பற்றி...
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
Published on
Updated on
1 min read

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இன்று(ஆக.27) கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து இயக்கங்களான இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாஜக, ஆர்எஸ்எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் பல்வேறு விநாயகர் சிலைகளை அமைத்து விநாயகர் சதுர்த்தியைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றன.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராகுல் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”விநாயகர் சதுர்த்தி திருநாளில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நல்ல தருணம் உங்கள் அனைத்து தடைகளையும் நீங்கி மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஏற்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Leader of the Opposition in the Lok Sabha Rahul Gandhi has extended his greetings on the occasion of Ganesh Chaturthi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com