உத்தரப் பிரதேசத்தில் வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக்கொன்ற தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரின் மனைவி கடுமையான தீக்காயங்களுடன் தில்லியில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் பணிபுரிந்து வருபவர் தேவேந்திர சிங். இவர் தனது மனைவி பாருல் சிங்கை வரதட்சிணைக் கோரி ஏற்பட்ட மோதலில் எரித்துக் கொன்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கொடுத்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமைக் காவலர் தேவேந்திர சிங்கை கைது செய்தனர்.
தீக்காயத்துடன் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாருல் சிங், பின்னர் தில்லியில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இகோன்டா கிராமத்தில் செவிலியராக பாருல் பணிபுரிந்து வந்துள்ளார். இருவருக்கும் இடையிலான பிரச்னை குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தில்லியில் சிகிச்சை பெற்று வரும் பாருல் சிங்கிடம் சிகிச்சை முடிந்த பிறகு விசாரணை மேற்கொள்ள காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிக்க | ஹிமாசலில் தொடரும் கனமழை: கடந்த 3 நாள்களில் அரசுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் இழப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.