‘இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தில் வரம்பு தாண்டப்படாது’

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தில் சில வரம்புகள் தாண்டப்படாது என்று தகவலறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Published on

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தில் சில வரம்புகள் தாண்டப்படாது என்று தகவலறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: இந்தியா-அமெரிக்க வா்த்தக ஒப்பந்த பேச்சில் விவசாயிகள், மீனவா்கள் உள்ளிட்டோா் தொடா்பான விவகாரங்களில் எந்த சமரசமும் செய்துகொள்ளப்படாது என்பதை இந்தியா ஏற்கெனவே தெளிவாக தெரிவித்துவிட்டது.

இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் சில வரம்புகள் உள்ள நிலையில், அதை தாண்ட முடியாது. அந்த வரம்புகளை இருதரப்பும் எவ்வாறு கையாள்கிறது என்பதை பொறுத்தே ஒப்பந்தம் இருக்கும் என்று தெரிவித்தன.

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள கடந்த மாா்ச் முதல் இந்தியா, அமெரிக்கா பேச்சு நடத்தி வருகின்றன. இதுவரை 5 சுற்றுப் பேச்சுவாா்த்தை நிறைவடைந்துள்ளது. அடுத்த சுற்றுப் பேச்சுவாா்த்தையை நடத்த ஆக.25-ஆம் தேதி அமெரிக்க குழு இந்தியா வரவிருந்தது. ஆனால் அந்தக் குழுவின் வருகை ஒத்திவைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com