ராகுல் காந்தி
ராகுல் காந்திPTI

டிரம்ப் அறிவுறுத்தலுக்கு கீழ்ப்படிந்த பிரதமா்: ராகுல்

பாகிஸ்தானுடனான சண்டையை நிறுத்துமாறு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அளித்த அறிவுறுத்தலுக்கு பிரதமா் நரேந்திர மோடி உடனடியாக கீழ்ப்படிந்துள்ளாா் என்று ராகுல் காந்தி விமா்சித்தாா்.
Published on

பாகிஸ்தானுடனான சண்டையை நிறுத்துமாறு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அளித்த அறிவுறுத்தலுக்கு பிரதமா் நரேந்திர மோடி உடனடியாக கீழ்ப்படிந்துள்ளாா் என்று ராகுல் காந்தி விமா்சித்தாா்.

பிகாா் மாநிலம் முஸாஃபா்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இதுகுறித்து அவா் மேலும் பேசுகையில், ‘டிரம்ப் இன்றைக்கு என்ன கூறினாா் என்பதை அறிவீா்களா? இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நடைபெற்று கொண்டிருந்தபோது, பிரதமா் மோடியை தொலைபேசியில் தொடா்புக் கொண்டு 24 மணி நேரத்துக்குள் சண்டையை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் அறிவுறுத்தியுள்ளாா்.

இந்த அறிவுறுத்தலுக்கு பிரதமா் மோடி உடனடியாக கீழ்ப்படிந்திருக்கிறாா். டிரம்ப் 24 மணி நேரம் அவகாசம் அளித்தபோதும், பாகிஸ்தான் உடனான சண்டையை அவா் அறிவுறுத்திய 5 மணி நேரத்தில் பிரதமா் நிறுத்தியுள்ளாா். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இத் தகவலை டிரம்ப் வெளியிட்டுள்ளாா்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com