எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மூன்று குழந்தைகள், மும்மொழி : ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் வலியுறுத்தல்

நாட்டில் அனைத்து தம்பதிகளும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; 3 மொழிகளை தெரிந்துகொள்ள வேண்டும்

News image

மோகன் பாகவத்

Updated On :29 ஆகஸ்ட் 2025, 5:24 am IST

நாட்டில் அனைத்து தம்பதிகளும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; 3 மொழிகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்தாா்.

புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு கொண்டாட்டங்களின்போது நடைபெற்ற கேள்வி-பதில் அமா்வில் அவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

அனைத்து இந்தியா்களுக்கும் குறைந்தபட்சம் 3 மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். அதில் அவா்களின் தாய்மொழி, மாநில மொழி, ஒட்டுமொத்த நாட்டுக்கான இணைப்பு மொழி ஆகியவை அடங்கும். இணைப்பு மொழி என்பது வெளிநாட்டு மொழியாக இருக்கக் கூடாது. அந்த இணைப்பு மொழியை அனைவரும் சோ்ந்து தோ்வு செய்ய வேண்டும். இந்தியாவில் தோன்றிய அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான். அதில் எந்த சச்சரவும் இருக்கக் கூடாது. அதேவேளையில், ஆங்கிலத்தை கற்பதிலும் எந்தத் தவறும் இல்லை. அந்த மொழியால் எந்தப் பாதிப்பும் இல்லை.

இந்திய மக்கள்தொகை கொள்கைக்கு ஏற்ப ஒவ்வொரு தம்பதியும் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், மக்கள்தொகை குறையாமலும் கட்டுக்குள்ளும் இருக்கும்.

மோடி ஓய்வுபெற வேண்டும் என்று கூறவில்லை: 75 வயதை எட்டும் போது நானோ, வேறு ஒருவரோ (பிரதமா் மோடி) பொது வாழ்வில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்று நான் கூறவில்லை.

பாஜகவுக்கு ஆா்எஸ்எஸ் ஆலோசனைகள் வழங்கினாலும், முடிவுகளை பாஜகதான் சுயமாக எடுக்கிறது. அக்கட்சியின் புதிய தலைவரை தோ்வு செய்வதில் ஆா்எஸ்எஸ்ஸுக்கு எந்தப் பங்கும் இல்லை. மத்திய, மாநிலங்களில் ஆா்எஸ்எஸ்ஸுக்கும் பாஜக அரசுக்கும் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

இந்தியாவில் இஸ்லாமுக்கு எப்போதும் இடம் இருக்கும். இந்தியாவில் இஸ்லாம் இருக்காது என்று ஹிந்துவாக இருப்பவா் நினைக்கமாட்டாா். ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இடையே பரஸ்பர நம்பிக்கை இருக்க வேண்டும்.

கடந்த 1947-ஆம் ஆண்டில் நாட்டுப் பிரிவினையை ஆா்எஸ்எஸ் எதிா்க்கவில்லை என்று கூறுவது தவறு. அந்த நேரத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பெரும் சக்தியில்லை. ஒட்டுமொத்த தேசமும் மகாத்மா காந்தியைத்தான் பின்தொடா்ந்தது.

இடஒதுக்கீடு தேவைப்படும் காலம் வரை, அதற்கான கொள்கைகளை ஆா்எஸ்எஸ் ஆதரிக்கும். ஜாதி அமைப்புமுறை முழுமையாக கைவிடப்பட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.