
மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே மற்றும் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.
இரண்டு புதிய நீதிபதிகளுக்கு இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். புதிதாகப் பதவியேற்ற நீதிபதிகளுடன் தற்போது உச்ச நீதிமன்றத்தில் 34 நீதிபதிகளைக் கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 25 அன்று, உச்ச நீதிமன்ற கொலீஜியம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வுக்கு நீதிபதிகள் ஆராதே மற்றும் பஞ்சோலி ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்தது.
நீதிபதி அலோக் ஆராதே
ஏப்ரல் 13, 1964இல் பிறந்த நீதிபதி ஆராதே, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக டிசம்பர் 29, 2009 அன்று நியமிக்கப்பட்டு, பிப்ரவரி 15, 2011 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட அவர், செப்டம்பர் 20, 2016 அன்று பதவியேற்றார். ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக மே 11, 2018 அன்று நியமிக்கப்பட்டார்.
நீதிபதி ஆராதே கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் நவம்பர் 17, 2018 அன்று நீதிபதியாகப் பதவியேற்றார். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக ஜூலை 3, 2022 அன்று பொறுப்பேற்றார், அக்டோபர் 14, 2022 வரை அந்தப் பதவியில் பணியாற்றினார்.
நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி
மே 28, 1968 இல் அகமதாபாத்தில் பிறந்த நீதிபதி பஞ்சோலி, அக்டோபர் 1, 2014 அன்று குஜராத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார், மேலும் ஜூன் 10, 2016 அன்று நிரந்தர நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
அவர் பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, ஜூலை 24, 2023 அன்று அங்கு நீதிபதியாகப் பதவியேற்றார். ஜூலை 21, 2025 அன்று பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி பஞ்சோலி பதவியேற்றார்.
செப்டம்பர் 1991 இல் அவர் வழக்கறிஞர் பணியில் சேர்ந்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பயிற்சியைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.