
மகாராஷ்டிரத்தின் லத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மராத்வாடா மாவட்டத்தில் உள்ள 60 வருவாய் வட்டங்களில் ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர் மட்டம் உயர்ந்ததால், வியாழக்கிழமை இரவு வரை 29 வருவாய் வட்டங்களில் அதிக மழை பெய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகஸ்ட் 29(இன்று) ம‘ஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவர் வர்ஷா தாக்கூர் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஷிரூர் அனந்த்பால் மற்றும் அகமதுபூர் தாலுகாக்களின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித்தவித்த பத்து பேரை பேரிடர் மேலாண்மை குழுக்கள் மற்றும் உள்ளூர் கிராமவாசிகள் மீட்டனர். அகமதுபூருக்கு ஒரு இராணுவக் குழுவும் வந்துள்ளது.
கனமழையைத் தொடர்ந்து நாந்தேட் மற்றும் லத்தூரில் 2,200 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.