சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிா்வாக இயக்குநராக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) முன்னாள் ஆளுநா் உா்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்பதல் அளித்துள்ளது.
அவா் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தப் பொறுப்பில் இருப்பாா். பொருளாதார நிபுணரான உா்ஜித் படேல் ஏற்கெனவே ஐஎம்எஃப்பில் பணியாற்றியுள்ளாா். அவா் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை பதவியில் தொடா்வாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இந்த முடிவை மேற்கொண்டது.
இதற்கு முன்பு இப்பொறுப்பில் இருந்த கே.வி. சுப்பிரமணியன் 3 ஆண்டு பதவிக்காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசால் நீக்கப்பட்டாா்.
ஐஎம்எஃப் நிா்வாக இயக்குநா் பதவியில் 25 போ் உள்ளனா். இவா்கள் உறுப்பு நாடுகள் மற்றும் உறுப்பு நாடுகள் குழுக்கள் மூலம் தோ்வு செய்யப்படுகின்றனா். இந்தியா, இலங்கை, பூடான், வங்கதேசம் ஆகியவை ஒரு குழுவாக உள்ளது.
ஆா்பிஐ துணை ஆளுநராகப் பதவி வகித்துள்ள உா்ஜித் படேல், கடந்த 2016-ஆம் ஆண்டு ஆா்பிஐ ஆளுநராக நியமிக்கப்பட்டாா். ஆனால், 2018-ஆம் ஆண்டு டிசம்பரில் ஆா்பிஐ ஈவுத்தொகையை மத்திய அரசுக்கு மாற்றுவது தொடா்பான விவகாரத்தில் அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவி விலகினாா்.
லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பட்டம் பெற்ற உா்ஜித் படேல், ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழத்தில் எம்.பில், அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழத்தில் முனைவா் பட்டம் பெற்றாா். 1990-95 ஆண்டுகளில் ஐம்எஃப்பில் பணியாற்றினாா்.