
பஞ்சாப் மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காகத் திரட்டப்படும், அம்மாநில முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
பஞ்சாபில், பெய்த கனமழையால் அங்குள்ள சட்லெஜ், ரவி உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் ஏற்பட்டு, ஏராளமான வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை அம்மாநில அரசு செய்து வருகின்றது.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவதற்காக திரட்டப்படும் முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்காக, அம்மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக, பஞ்சாப் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான பஜ்வா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் உள்பட ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரண நிதிக்காக வழங்குவதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மாநிலத்தில், அனைவரும் ஒன்றிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: ஜம்முவில் ரயில் சேவைகள் மூன்றாவது நாளாக நிறுத்தம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.