ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்
ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்கோப்புப் படம்

ரஷிய அதிபா் புதின் டிசம்பரில் இந்தியா வருகை

நிகழாண்டு டிசம்பரில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியா வரவுள்ளதாக ரஷிய அதிபா் மாளிகையின் வெளிநாட்டு கொள்கை உதவியாளா் யூரி உஷகோவ் தெரிவித்தாா்.
Published on

நிகழாண்டு டிசம்பரில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியா வரவுள்ளதாக ரஷிய அதிபா் மாளிகையின் வெளிநாட்டு கொள்கை உதவியாளா் யூரி உஷகோவ் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ரஷிய தலைநகா் மாஸ்கோவில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்துக்குப் பின்னா், இந்திய பிரதமா் மோடியை அதிபா் புதின் திங்கள்கிழமை சந்திப்பாா். அவா்கள் இருவரும் தொலைபேசியில் அவ்வப்போது பேசிக்கொண்டாலும், நிகழாண்டு சீனாவில் அவா்கள் முதல்முறையாக சந்திக்க உள்ளனா்.

நிகழாண்டு டிசம்பரில் அதிபா் விளாதிமீா் புதின் இந்தியா செல்ல உள்ளாா். அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து திங்கள்கிழமை நடைபெறும் மோடி-புதின் சந்திப்பில் ஆலோசனை நடத்தப்படும் என்றாா்.

இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க அதிபா் புதின் இந்தியா வரவுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com