
உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நடைபெறும் கொடியேற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்பதாக, அக்கோயில் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலில், வரும் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி விவாக பஞ்சமி விழாவுடன், கொடியேற்ற விழாவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் சுமார் 10,000 விருந்தினர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ராமர் கோயில் வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக, ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விழாக்கான ஏற்பாடுகள் குறித்து, கோயில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.ஹெச்.பி. ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 25 ஆம் தேதி காலை 11.45 முதல் மதியம் 12.15 மணி வரையில் கொடி வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெறும் என்றும், வளாகத்தில் உள்ள 20 கோயில்களிலும் கொடிகள் ஏற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ராகுல் காந்தியின் பேரணியில் இணைகிறது திரிணமூல் காங்கிரஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.