வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த அகிலேஷ் யாதவ்!

சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் இணைந்தார்.
Akhilesh Yadav joins 'Voter Adhikar Yatra' in Bihar
பேரணியில் ராகுலுடன் இணைந்த அகிலேஷ்
Published on
Updated on
1 min read

பிகாரில் சரண் மாவட்டத்தில் நடைபெறும் வாக்குரிமைப் பேரணியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் இணைந்தார்.

இதுதொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைர் கே.சி. வேணுகோபால், நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க பாஜக மேற்கொண்டதாகக் கூறப்படும் முயற்சிக்கு எதிரான கட்சியின் போராட்டத்தில் யாதவ் ஒரு உறுதியான கூட்டாளி என்று கூறினார்.

இன்று காலை அகிலேஷ் யாதவ் சரண் நகரில் நடைபெறும் வாக்குரிமைப் பேரணியில் இணைந்தார். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான வரலாற்று இயக்கத்திற்கு அவரை வரவேற்றோம்.

பாஜக நமது ஜனநாயகத்தை அழிப்பதை எதிர்த்துப் போராடுவதில் அவர் ஒரு உறுதியான கூட்டாளியாகவும், உ.பி. மற்றும் நாடு முழுவதும் ஏழைகள் மற்றும் எளியவர்களுக்கான வலுவான குரலாகவும் இருந்துவருகிறார் என்று அவர் கூறினார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை யாதவ் சந்தித்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் மகள் ரோகிணி ஆச்சார்யாவும் அங்கு வந்திருந்தார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், அவரது சகோதரி ரோகிணி ஆச்சார்யா மற்றும் இந்தியாக் கூட்டணியின் பிற பிரதிநிதிகள் சரண் நகரில் வாகனத்திலிருந்தபடி உற்சாகமான மக்கள் கூட்டத்தை நோக்கிக் கையசைத்தனர்.

பிகாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 17 அன்று ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாரமில் இருந்து காங்கிரஸின் வாக்காளர் அதிகார பேரணியை ராகுல்காந்தி தொடங்கினார். இந்த பேரணி செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் முடிவடைகிறது.

யாத்திரை இதுவரை கயாஜி, நவாடா, ஷேக்புரா, லக்கிசராய், முங்கர், கதிஹார், தர்பங்கா, மதுபானி, சீதாமர்ஹி, முசாபர்பூர், பூர்னியா, மேற்கு சம்பாரண், கோபால்கஞ்ச், கிழக்கு சம்பாரண் மற்றும் சிவான் மாவட்டங்களைச் சென்றுள்ளது. மேலும் போஜ்பூர் மற்றும் பாட்னா வழியாகச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com