பைரபியிலிருந்து சாய்ரங் வரை அமைக்கப்பட்டுள்ள  புதிய ரயில் பாதை.
பைரபியிலிருந்து சாய்ரங் வரை அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதை.

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. புதிய ரயில் பாதை: செப்.13-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையை பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளார்.
Published on

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையை பிரதமா் நரேந்திர மோடி வரும் செப். 13- ஆம் தேதி திறந்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

மிசோரம் மாநிலம், பைரபியிலிருந்து சாய்ரங் வரை 52 கி.மீ. தொலைவுக்கு ரூ. 8,071 கோடியிலான புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மிசோரம் தலைநகரான ஐஸ்வால் பகுதியை இணைக்கும் வகையில் சுமாா் 52 கி.மீ. தூரத்துக்கு ரூ.5, 000 கோடியில் ரயில் பாதை அமைக்க மத்திய அரசு திட்டம் தீட்டியது. திட்டத்தின்படி 2014- ஆம் ஆண்டு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது.

இந்த ரயில் பாதையில் 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள் மற்றும் 48 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ரயில் பாதை அமைக்க மொத்தம் ரூ.8,071 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய ரயில் பாதையில் அமைந்துள்ள பாலங்களில் 114 மீட்டா் உயரமுள்ள சாய்ரங் பாலம் நாட்டில் இரண்டாவது உயரமான பாலமாக கூறப்படுகிறது.

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதை.
மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதை.

இதுகுறித்து வடக்கிழக்கு எல்லை ரயில்வே மண்டல மக்கள் தொடா்பு அதிகாரி நிலஞ்சன் தேப் கூறியதாவது: இந்த ரயில் பாதை வெவ்வேறு காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்டன. சவாலான இப்பணியின்போது ஆண்டுக்கு 4 மாதங்கள் மட்டுமே பணிகள் நடைபெற்றன. பணிகளுக்கான கட்டுமான பொருள்களை அஸ்ஸாம், ஒடிஸா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்துதான் கொண்டு வரவேண்டியிருந்தது.

ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற பணியின்போது சுமாா் 200-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மிசோரம் மக்கள் பணியில் ஈடுபட விருப்பம் தெரிவிக்காததால், பிகாா், ஒடிஸா போன்ற வெளிமாநிலங்களிலிருந்து அழித்து வரப்பட்டவா்களால்தான் பணிகள் நடைபெற்று முடிந்தன.

மலைகளுக்கிடையே ரயில் பாதை அமைக்கப்படுவதால், அதற்கான ஆயத்த பணிகளுக்கு சுமாா் 200 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டன. திட்டத்தில் பைரபியிலிருந்து 4 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அங்குள்ள கிராமங்களுடன் இணைக்க சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் பாதை திட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும். அதனால் சமூக, பொருளாதார வசதிகள் ஏற்படும் என்றாா்.

விலை குறையும்: இந்த ரயில் பாதைத் திட்டம் குறித்து தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி செந்தமிழ்செல்வன் கூறுகையில், இதுவரை சாலை மாா்க்கத்தில் பயண செலவு அதிகம் இருக்கும் நிலையில், தற்போது ரயில் வசதியால் செலவு குறையும் என்றாா்.

மேலும், புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்து வரும் செப். 13-ஆம் தேதியில் பிரதமா் நரேந்திர மோடி, திறந்துவைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com