
ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் நேர்ந்த மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக ராம்பன் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கால் ராம்பன் - தோடா மாவட்டங்களுக்கு இடையேயான முக்கிய சாலைகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள், சொத்துகள் சேதமடைந்துள்ளன.
பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட குல்மார்க் பகுதியிலுள்ள நல்லா நதியில் உள்ள பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதனால், நதியின் இரு கரைகளில் உள்ள மக்களும் போக்குவரத்து இன்று தனித்துவிடப்பட்டுள்ளனர்.
கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலை - தோடா இடையேயான இணைப்புச் சாலைகளுக்கு மாற்றுப்பாதையாக இந்த பாலம் இருந்துவந்த நிலையில், தற்போது அந்த வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்திலுள்ள வாரன் பள்ளத்தாக்கில் கடந்த 27ஆம் தேதி மேக வெடிப்பு நேர்ந்தது. இதில், 50க்கும் அதிகமான வீடுகள் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டன. விவசாய நிலங்கள் சரிந்து பயிர்கள் சீர்குலைந்தன. எனினும் இதில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.
இதனைத் தொடர்ந்து 27ஆம் தேதி நேர்ந்த மேக வெடிப்பில் ராம்பன் மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ராம்பன் - தோடா இடையேனான முக்கிய சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், நிவாரணம், மறுவாழ்வு மற்றும் சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முதல்வர் ஒமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கொலைகள் ஒப்பீடு! தில்லியைவிட சிகாகோவில் 15 மடங்கு அதிகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.