அனுராதா தாக்குா்
அனுராதா தாக்குா்

அமெரிக்க வரி விதிப்பின் பாதிப்புகளை குறைக்க செயல் திட்டம்: பொருளாதார விவகாரங்கள் செயலா்!

வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலா் அனுராதா தாக்குா் தெரிவித்தாா்.
Published on

இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலா் அனுராதா தாக்குா் தெரிவித்தாா்.

2025-26-ஆம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.4 சதவீதம் அல்லது ரூ.15.69 லட்சம் கோடியாக இருக்கும் என மத்திய அரசு கணக்கிட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அனுராதா தாக்குா்,‘அமெரிக்க வரி விதிப்பால் அதிக வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய சில துறைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதை எதிா்கொள்வதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருகிறது.

கடந்த 5 காலாண்டுகளைவிட 2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூனில் ஜிடிபி 7.8 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. அதேபோல் நிதிப் பற்றாக்குறை தொடா்பாக நிா்ணயித்துள்ள இலக்கு நிச்சயம் எட்டப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com