ராகுல் பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பாஜக போராட்டம்!

குவாஹாட்டி, ஜம்மு, கான்பூரில் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்களால் பதற்றமான சூழல்...
குவாஹாட்டியில் பாஜக போராட்டம்
குவாஹாட்டியில் பாஜக போராட்டம்PTI
Published on
Updated on
1 min read

பிகாரில் ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பேரணியில், பிரதமர் மோடியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடியோவைச் சுட்டிக்காட்டி காங்கிரஸுக்கு எதிராக பாஜக போராட்டத்தில் ஈடுபட்டது.

அந்த விடியோவில், பிகாரில் ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பேரணியில் ஒரு நபர் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரை அவமதித்து ஹிந்தியில் பேசுவதாக சொல்லப்படுகிறது. இதனைச் சுட்டிக்காட்டி இன்று (ஆக. 31) கான்பூரில் காங்கிரஸுக்கு எதிராக காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்களால் பதற்றமான சூழல் நிலவியது.

அவர்களுக்கு எதிராக பெரும் எண்ணிக்கையில் காங்கிரஸ் தொண்டர்களும் கைகளில் தடிகளுடன் திரண்டதால் கான்பூரில் பதற்றம் அதிகரித்தது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் போராடிய நிலையில், பதற்றம் தணிந்தது.

அதேபோல, ஜம்முவிலும், அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டியிலும் பிற இடங்களிலும் காங்கிரஸுக்கு எதிராக பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Summary

BJP workers protest outside Cong's Kanpur office over remarks against PM, mother

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com