
கேரளத்தில் பிரபல யூடியூபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், தொடுபுழாவில் பிரபல யூடியூபர் ஷாஜன் ஸ்காரியா நேற்று மாலை அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், குற்றம்சாட்டப்பட்டவர் ஸ்காரியாவின் வாகனத்தை மறித்து, அவரைத் தாக்கியுள்ளார்.
அதோடு அவரைக் கொலை செய்யவும் முயன்யுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தொடுபுழா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தாக்குதலில் தொடர்புடைய மர்ம நபரை கைது செய்ய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான யூடியூபர் ஸ்காரியா மருநாடன் மலையாளி என்ற யூடியூப் சேனலின் உரிமையாளர் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.