

சர்வதேச தேர்தல் நிறுவனத்தின் தலைவராக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியேற்றுக் கொள்ள உள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் பதவியாக இந்தப் பொறுப்பு அமைந்துள்ளது.
இந்த நிலையில், இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: “நியாயமான முறையிலும், வெளிப்படைத் தன்மையுடன் இந்தியாவில் தேர்தல்கள் நடைபெற்றிருப்பதை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன. இந்த நிலையில், அதன் வெளிப்பாடாக, கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக, ‘ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்தின் (ஐ.டி.இ.ஏ)’ தலைமைப் பதவியேற்றுக்கொள்ள 37 ஜனநாயக நாடுகள் இணைந்து இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இது, அனைத்து இந்தியர்களுக்கும், அதேபோல தேர்தல் அதிகாரிகளுக்கும் பெருமிதம் அளிக்கும் தருணமாக அமைந்துவிட்டது” என்றார். இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், டிச. 3-இல் சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெறும் விழாவில் பதவி ஏற்றுக்கொள்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.