

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் வரும் இன்று தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரில் 15 அமா்வுகள் இடம்பெற உள்ளன.
இந்த கூட்டத்தொடரில் 14 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், எஸ்ஐஆர், தில்லி காற்று மாசு, வாக்குத் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப காத்துள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில் அவரின் தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுகவின் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.