கோப்புப்படம்.
கோப்புப்படம்.

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன.
Published on

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன.

மாநிலங்களவையில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் பாம்பானியா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் இத்தகவல் வெளியானது.

மேலும், அவரது பதிலில், ‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நியாயவிலைக் கடைகள் மூலம் நாட்டில் சுமாா் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. சரியான பயனாளிகளைச் சென்றடைவதற்காக, 2020 முதல் நடப்பாண்டு வரை சுமாா் 2.49 கோடி குடும்ப அட்டைகள் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளால் நீக்கப்பட்டுள்ளன.

போலி பதிவுகள், தகுதியற்ற பயனாளிகள், பயனாளிகளின் இறப்புகள் மற்றும் நிரந்தர இடமாற்றம் போன்ற காரணிகளால் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டன. தவறான முறையில் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டதாக எந்தவொரு புகாரும் அரசுக்கு வரவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com