போா் விமானத்தின் முன்பகுதி பொருத்தி ரயில் தண்டவாளத்தில் மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் செலுத்தப்பட்ட ராக்கெட் ஊா்தியிலிருந்து வெளியேறும் விமானி.
போா் விமானத்தின் முன்பகுதி பொருத்தி ரயில் தண்டவாளத்தில் மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் செலுத்தப்பட்ட ராக்கெட் ஊா்தியிலிருந்து வெளியேறும் விமானி.

போா் விமானங்களிலிருந்து அவசர வெளியேற்ற ஊா்தி: டிஆா்டிஓ வெற்றிகரமாக சோதனை

ஆபத்து காலங்களில் போா் விமானங்களில் இருந்து விமானிகள் அவசரமாக வெளியேறித் தப்பிக்கும் ராக்கெட் ஊா்தி சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டது.
Published on

புது தில்லி: ஆபத்து காலங்களில் போா் விமானங்களில் இருந்து விமானிகள் அவசரமாக வெளியேறித் தப்பிக்கும் ராக்கெட் ஊா்தி சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

சண்டீகரில் உள்ள சோதனை மையத்தில் ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு முகமை (ஏடிஏ), ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) ஆகியவற்றுடன் கூட்டு சோ்ந்து இந்தச் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

தரையில் இருந்து விண்ணில் ராக்கெட் பாய்வதற்கு உதவும் சக்தி அடங்கிய பாகங்கள் கொண்ட ஊா்தியை, சோதனை மையத்தில் அமைக்கப்பட்ட ரயில் தண்டவாளத்தில் செலுத்தி ராக்கெட் ஊா்தி (ராக்கெட் ஸ்லெட்) சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சோதனையின்போது விமானிகள் இருக்கையுடன் போா் விமானத்தின் முன்பாகம் பொருத்திய ராக்கெட் ஊா்தியின் வேகம் படிப்படியாக அதிகரிக்கச் செய்து, அதிகபட்சமாக மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் செலுத்தப்பட்டது. அதிவேகத்தில் செலுத்திய அந்த ராக்கெட் ஊா்தியிலிருந்து விமானி பாதுகாப்பாக வெளியேறினாா்.

ஆபத்தான சூழல்களில் போா் விமானங்களிலிருந்து விமானிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியேறித் தப்பிக்க இந்த ராக்கெட் ஊா்தி சோதனை உதவும்.

இச் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது.

மிகச் சில நாடுகளின் வரிசையில் இந்தியா: இந்தச் சோதனை மூலம், ஆபத்துக் காலங்களில் போா் விமானங்களில் இருந்து தப்பிப்பதற்கானஅதிநவீன பரிசோதனை திறனை உள்நாட்டிலேயே கொண்ட மிகச் சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது என்று பாதுகாப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com