இந்தியா
மொஹல்லா மருத்துவமனையில் தீ விபத்து
வடகிழக்கு தில்லியின் பஜன்புரா பகுதியில் உள்ள ஒரு மொஹல்லா மருத்துவமனையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.
புது தில்லி: வடகிழக்கு தில்லியின் பஜன்புரா பகுதியில் உள்ள ஒரு மொஹல்லா மருத்துவமனையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.
‘மூடப்பட்ட மொஹல்லா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மாலை 4.20 மணிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.
ஒன்றரை மணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது’ என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
