எல்.முருகன்
எல்.முருகன்

தமிழகத்தில் நிலவும் அரசியல் காரணங்களால் ஹிந்தி கற்க முடியவில்லை: எல்.முருகன்

தமிழகத்தில் நிலவும் அரசியல் காரணங்களால் தன்னால் ஹிந்தி கற்க முடியவில்லை என்றும், தில்லிக்கு வந்த பிறகுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும் மத்திய தகவல் - ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
Published on

நமது நிருபா்

வாரணாசி: தமிழகத்தில் நிலவும் அரசியல் காரணங்களால் தன்னால் ஹிந்தி கற்க முடியவில்லை என்றும், தில்லிக்கு வந்த பிறகுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும் மத்திய தகவல் - ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமம் 4.0 தொடக்க நிகழ்ச்சியில் இதுதொடா்பாக அவா் பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடியின் சீரிய வழிகாட்டுதல்கள் மற்றும் தலைமையின் கீழ் தேசிய கல்விக் கொள்கையை மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கொண்டு வந்தாா். ஆனால், அது அரசியலாக்கப்படுகிறது. இந்த மேடையில் (காசி தமிழ்ச் சங்கமம்) நான் அரசியல் பேச விரும்பவில்லை.

இருந்தாலும் ஹிந்தி கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏன் மறுக்கப்படுகிறது எனத் தெரியவேண்டும். அது ஒருவருடைய உரிமை. ஆனால், அதற்கான வாய்ப்புகள் தமிழகத்தில் இல்லை. அங்குள்ள அரசியலால் ஹிந்தி கற்க இயலவில்லை. தில்லி வந்த பிறகுதான் எனக்கு அதற்கான சூழல் அமைந்தது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com