

உத்தரகண்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்ததில் 5 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தகரண்ட் மாநிலம், லோஹாகாட் பகுதியில் திருமண வீட்டினரை ஏற்றிச் சென்ற ஜீப் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகினர்.
மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். இதுகுறித்து மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு நிர்வாகம் தெரிவிக்கையில், திருமண சடங்குகளுக்குப் பிறகு வீடுதிரும்பியபோது ஜீப் தேசிய நெடுஞ்சாலையில் பரகோட் அருகே கட்டுப்பாட்டை இழந்து வியாழக்கிழமை இரவு பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
பரகோட்டுக்கு அருகிலுள்ள பாக்தார் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது. போலீஸ் மற்றும் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுக்கள் உடனடி மீட்பு நடவடிக்கையைத் தொடங்கின.
ஆழமான பள்ளத்தாக்கில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுப்பது மிகவும் சவாலானது என்று மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவின் அதிகாரி யதுவான்ஷி தெரிவித்தார்.
இருப்பினும், தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு அனைவரும் மீட்கப்பட்டனர்.
பலியானவர்கள் ருத்ராபூரின் சுபாஷ்நகரைச் சேர்ந்த பிரகாஷ் சந்த் உனியல் (40), கேவல் சந்திரா உனியல் (35), சுரேஷ் நௌடியல் (32), பவ்னா சௌபே (28) மற்றும் அவரது ஆறு வயது மகன் பிரியான்ஷு சௌபே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் லோஹாகாட் துணை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.