மாநிலங்களுக்கு இடையே ஆயுதக் கடத்தல்: 4 போ் கைது

மாநிலங்களுக்கு இடையே ஆயுதக் கடத்தல்: 4 போ் கைது

தில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்பனை செய்து வந்த கும்பலைச் சோ்ந்த 4 போ் கைது
Published on

தில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்பனை செய்து வந்த கும்பலைச் சோ்ந்த 4 போ் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

அவா்களிடமிருந்து 8 துப்பாக்கிகள், 30 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக தில்லி காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொள்ளை, கொலை மற்றும் திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பாபு (எ) அஸ்லாம் தனது கூட்டாளிகளுக்கு ஆயுதங்களை விநியோகிக்க மாடல் டவுன் பகுதிக்கு வருவதாக கடந்த நவ.19-ஆம் தேதி தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். பின்னா், வடக்கு -எக்ஸ் வடிகால் பகுதியில் அவா் இருப்பதாக உள்ளூா் தகவல் அளிப்பவா் காவல் துறையிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்றனா். அப்போது, அங்கிருந்து தப்பியோட முயன்ற பாபுவை போலீஸாா் துரத்திச் சென்று கைதுசெய்தனா்.

சோதனையின்போது, இரு துப்பாக்கிகள், 5 தோட்டாக்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் அவா் அளித்த தகவலின் அடிப்படையில், சந்தோஷ் (32), அஜீம் (35) ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா். கொலை முயற்சி மற்றும் ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள முகமது பிலாலை போலீஸாா் கைதுசெய்தனா்.

இந்தக் கைது நடவடிக்கையின்போது நடைபெற்ற சோதனையில், 3 துப்பாக்கிள், 3 நாட்டு துப்பாக்கிகள், 25 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com