7 உலகத் தலைவர்களை மட்டுமே விமான நிலையத்தில் வரவேற்றுள்ள மோடி! ஒருவர் மிஸ்ஸிங்!!

விமான நிலையத்துக்கே சென்று மோடி வரவேற்ற 7 உலகத் தலைவர்கள் பற்றி...
கோப்புபடங்கள்
கோப்புபடங்கள்
Updated on
2 min read

பிரதமர் நரேந்திர மோடி இதுவரை 7 உலகத் தலைவர்களை மட்டுமே விமான நிலையத்துக்கே நேரில் சென்று வரவேற்றுள்ளார்.

23-ஆவது இந்திய - ரஷிய உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வியாழக்கிழமை மாலை இந்தியா வந்தாா்.

வழக்கமாக பிற நாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போது, மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று அவர்களை வரவேற்பது வழக்கம். ஆனால், தில்லி பாலம் விமான நிலையத்துக்கு நேரில் சென்ற பிரதமர் மோடி, புதினை ஆரத்தழுவி வரவேற்றது சர்வதேச அளவில் பேசுபொருளானது.

தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து இருவரும் ஒரே காரில் பயணித்த காணொலிகள் வைரலாகப் பரவியது.

நேற்றிரவு தனது இல்லத்தில் புதினுக்கு இரவு விருந்தளித்த பிரதமர் மோடி, இன்று உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு அவருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 11 ஆண்டுகளாகும் நிலையில், இதுவரை 6 உலகத் தலைவர்களை மட்டுமே விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றுள்ளார்.

பராக் ஒபாமா - 2015

கடந்த 2015 ஆம் ஆண்டு தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகைதந்த அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைதான் முதல்முறையாக விமான நிலையத்துக்கு நேரில் சென்று மோடி வரவேற்றார்.

ஷேக் ஹசீனா - 2017

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தில்லிக்கு வருகைதந்த அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நேரில் சென்று மோடி வரவேற்றார்.

தற்போது, வங்கதேச வன்முறையைத் தொடர்ந்து, அந்நாட்டில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா, இந்திய அரசின் பாதுகாப்புடன் தில்லியில் உள்ள மறைவிடத்தில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளார்.

ஷின்சோ அபே - 2017

கடந்த 2017 ஆம் ஆண்டு அகமதாபாத்துக்கு வருகைதந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை நேரில் சென்று பிரதமர் மோடி வரவேற்றார். இந்த சந்திப்புக்குப் பிறகுதான் அகமதாபாத் - மும்பை இடையே முதல் புல்லட் ரயில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

டொனால்ட் டிரம்ப் - 2020

கடந்த 2020 ஆம் ஆண்டு அகமதாபாத்துக்கு வருகைதந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் மோடி விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார். பின்னர், நரேந்திர மோடி மைதானத்தில் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்ட ’நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டனர்.

முகமது பின் சயீத் அல் நஹ்யான் - 2024

கடந்தாண்டு குஜராத் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகைதந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நேரில் சென்று மோடி வரவேற்றார்.

அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி - 2025

இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் தில்லிக்கு வருகைதந்த கத்தார் நாட்டின் அரசர் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை நேரில் வரவேற்றிருந்தார்.

ஒருவர் மிஸ்ஸிங்

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட பெரும் நாடுகளின் தலைவர்களை விமான நிலையத்துக்கே நேரில் சென்று பிரதமர் மோடி வரவேற்றிருக்கும் நிலையில், சென்னைக்கு வருகைதந்த ஷி ஜின்பிங்கை மட்டும் நேரில் வரவேற்கவில்லை.

கடந்த 2019 அக்டோபர் மாதம் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் மோடி மற்றும் ஷி ஜின்பிங்கின் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. அப்போது சென்னை விமான நிலையத்துக்கு வருகைதந்த ஷி ஜின்பிங்கை பிரதமர் மோடி நேரில் வரவேற்கவில்லை. அவருக்கு முன்னதாகவே மாமல்லபுரம் சென்றுவிட்டார்.

Summary

7 world leaders welcomed by Modi at the airport

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com