

குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை புதின் ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
23-ஆவது இந்திய - ரஷிய உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வியாழக்கிழமை மாலை இந்தியா வந்தாா்.
தில்லி பாலம் விமான நிலையத்தில் புதினை நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி, தனது இல்லத்தில் அவருக்கு இரவு விருந்தளித்தார்.
இந்த நிலையில், இன்று உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்பாக, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகைதந்த புதினை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வரவேற்றார்.
தொடர்ந்து, சிவப்பு கம்பள வரவேற்பையும், படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் புதின் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து, ராஜ பாதைக்குச் செல்லும் புதின், மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்னர், ஹைதராபாத் மாளிகையில் நடைபெறும் உச்சிமாநாட்டில் மோடியைச் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
இன்றிரவு மீண்டும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரும் புதினுக்கு திரெளபதி முர்மு இரவு விருந்தளிக்கிறார். அதில் பங்கேற்ற பிறகு, இன்றிரவே மாஸ்கோவுக்கு புதின் புறப்பட்டுச் செல்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.