

பாட்னாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் கட்டமைக்கும் திட்டத்துக்கு பிகார் மாநில அரசு அனுமதியளித்துள்ளது. இதற்காக பிகார் தலைநகர் பாட்னாவையொட்டிய மோகாம காஸ் பகுதியில், 99 ஆண்டுகளுக்கு ரூ.1 கட்டணத்தில் 10.11 ஏக்கர் நிலம் பிகார் அரசால் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டி நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் தலைவர் பி. ஆர். நாயுடு, பிகார் அரசின் ஒத்துழைப்புக்கும் பிகார் சுற்றுலாத் துறை மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, கோயில் கட்டுமானம் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான பிரதிநிதிகள் விரைவில் ஆலோசனையில் ஈடுபட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.