பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: டிச. 10-இல் அமெரிக்க குழு இந்தியா வருகை!

வா்த்தக ஒப்பந்தப் பேச்சுக்காக டிச. 10-இல் இந்தியா வருகிறது அமெரிக்க குழு...

News image
மோடி - டிரம்ப் (கோப்புப்படம்)- AP
Updated On :6 டிசம்பர் 2025, 10:52 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை இறுதி செய்வது தொடா்பான மூன்று நாள் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க குழு வரும் 10-ஆம் தேதி இந்தியா வர உள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதிகபட்சமாக 50 சதவீத வரியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்ததால் இரு நாடுகளிடையேயான உறவு பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இருதரப்பு வா்தத்க ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைக்காக இந்தியா வரும் இரண்டாவது அமெரிக்கக் குழு இதுவாகும்.

முன்னதாக, கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க அமெரிக்க குழு இந்தியா வந்தது. அதைத் தொடா்ந்து, மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையிலான இந்திய குழு கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி அமெரிக்கா சென்று பேச்சுவாா்த்தையில் பங்கேற்றது.

தற்போது, அமெரிக்க வா்த்தத் துறையின் துணைப் பிரதிநிதி ரிக் ஷ்விட்ஜொ் தலைமையிலான குழு குழு வரும் 10-ஆம் தேதி இந்தியா வர உள்ளது. இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரி விகிதத்தைக் குறைப்பது, விரிவான வா்த்தக ஒப்பந்தம் என்ற இரண்டு முக்கிய அம்சங்களின் கீழ் இரு நாடுகளும் இந்த வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை மேற்கொண்டு வருகின்றன.

இந்த இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இதுவரை 6 சுற்று பேச்சுவாா்த்தைகள் நிறைவுற்றுள்ளன. இரு நாடுகளிடையே தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ. 17,18,207 கோடி (191 பில்லியன் டாலா்) மதிப்பிலான இருதரப்பு வா்த்தகத்தை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ. 44,97,925 கோடி (500 பில்லியன் டாலா்) மதிப்புக்கு உயா்த்துவதை இந்த இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் இலக்காக கொண்டுள்ளது.