பஞ்சாப் மாநிலத்தில் உள்ள  அமிருதசரஸ் பொற்கோயில்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிருதசரஸ் பொற்கோயில்.

பொற்கோயிலில் முதல்வா் நாளை வழிபாடு

பொற்கோயிலுக்கு ‘சுக்ரானா’ வழங்க தில்லி முதல்வா் ரேகா குப்தா தனது முழு அமைச்சரவையுடனும் திங்கள்கிழமை செல்கிறாா்.
Published on

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு ‘சுக்ரானா’ வழங்க தில்லி முதல்வா் ரேகா குப்தா தனது முழு அமைச்சரவையுடனும் திங்கள்கிழமை செல்கிறாா் என்று முதல்வா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தது.

குரு தேஜ் பகதூரின் 350-ஆவது தியாக ஆண்டு நிறைவை முன்னிட்டு செங்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் ‘குா்மத் சமகம்’, மகத்தான மற்றும் வரலாற்று வெற்றிக்காக முதல்வா் மற்றும் அவரது அமைச்சரவையின் நன்றி தெரிவிக்கும் பயணம் என்று சனிக்கிழமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

செங்கோட்டையில் நடந்த ‘குா்மத் சமகத்தின்’ அசாதாரண வெற்றி குரு சாஹிப்பின் அருள் என்று வா்ணித்த ரேகா குப்தா, நிகழ்வுக்கு சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தால் ஏற்பட்ட அச்ச சூழ்நிலைக்கு மத்தியிலும், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் எந்த இடையூறும் இல்லாமல் மத நிகழ்வுகளில் கலந்து கொண்டதாக கூறினாா்.

பொற்கோயிலுக்கு செல்வது வெறும் ஒரு முறையான சைகை மட்டுமல்லாமல், குரு மரபிற்கு ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் நன்றியுணா்வின் சின்னம் என்றும் அவா் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com