

ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான கட்டணங்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
விமானிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் கட்டாய ஓய்வு விதியால், இண்டிகோ விமான நிறுவனத்தில் ஊழியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டு கடந்த சில நாள்களாக விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றும் 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான கட்டணங்களை பயணிகளுக்கு நாளை (டிச. 7) இரவு 8 மணிக்குள் திருப்பிச் செலுத்துமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பயணிகளின் லக்கேஜ்-களை இரு நாள்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றுன் இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: விமானத் துறை 2 நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் துறையாக மாறிப் போனது ஏன்?: ப. சிதம்பரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.