எஸ்ஐஆர் செயல்முறையில் வெளிநாடுகளில் வாழும் மகன்களின் போலி விவரங்கள் சமர்ப்பிப்பு: தாய் மீது வழக்கு

வெளிநாடுகளில் வாழும் மகன்களின் போலி விவரங்கள் சமர்ப்பித்த குற்றச்சாட்டில் பெண்மணி மீது வழக்கு பற்றி...
எஸ்ஐஆர் பணி
எஸ்ஐஆர் பணிPTI
Updated on
1 min read

எஸ்ஐஆர் செயல்முறையில் வெளிநாடுகளில் வாழும் மகன்களின் போலி விவரங்கள் சமர்ப்பித்த குற்றச்சாட்டில் பெண்மணி மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட கேரளம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) செயல்முறை தீவிரமாக நடைபெறுகிறது.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஜ்வலா நகரில் வாழும் நூர்ஜஹான் என்ற பெண்மணி, எஸ்ஐஆர் செயல்முறையில் கேட்கப்பட்ட தகவல்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக துபை மற்றும் குவைத்தில் வாழும் தமது இரு மகன்களின் போலியான விவரங்களை அவர்கள் சார்பாகச் சமர்ப்பித்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

மேற்கண்ட படிவங்களில் தமது மகன்களின் சார்பாக அந்தப் பெண்மணியே போலியான கையெழுத்திட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரணை நடைபெறுகிறது.

Summary

Police here have registered an FIR against a woman and her two sons -- currently residing abroad -- for allegedly furnishing false details during the Special Intensive Revision (SIR) of electoral rolls, officials said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com