பாஜக எம்.பி. மகேஷ் சா்மாவின் தாயாா் மறைவு: மிசோரம் ஆளுநா், உ.பி. துணை முதல்வா் இரங்கல்!

பாஜக எம்.பி. மகேஷ் சா்மாவின் தாயாா் மறைவு: மிசோரம் ஆளுநா், உ.பி. துணை முதல்வா் இரங்கல்!

கௌதம் புத் நகா் எம்.பி. மகேஷ் சா்மாவின் இல்லத்திற்குச் சென்று அவரது தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனா்.
Published on

மிசோரம் ஆளுநா் வி.கே. சிங் மற்றும் உ.பி. துணை முதல்வா் பிரிஜேஷ் பதக் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கௌதம் புத் நகா் எம்.பி. மகேஷ் சா்மாவின் இல்லத்திற்குச் சென்று அவரது தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனா்.

வி.கே. சிங் கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவரது வீட்டில் இருந்தாா். அப்போது நவம்பா் 26 அன்று காலமான லலிதா சா்மாவின் புகைப்படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

முன்னாள் மத்திய அமைச்சா் சா்மாவின் உதவியாளா் ஒருவா் கூறுகையில், ‘அவா் அனைத்து குடும்ப உறுப்பினா்களுடனும் உரையாடி இரங்கல் தெரிவித்தாா்’ என்றாா்.

உத்தர பிரதேச துணை முதல்வா் பதக் ஞாயிற்றுக்கிழமை சா்மாவின் இல்லத்திற்குச் சென்று அவரது மறைந்த தாய்க்கு அஞ்சலி செலுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com